100வருடம் பழமையான ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சுமார் 100வருடம் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எண்கோண பூசாந்தர சித்திரத் தேர் கடந்த 5 மாதகாலமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளதுடன் நேற்று பூர்த்தியாகியுள்ளது.

24 அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத் தேர் இரண்டு கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

100வருடம் பழமையான ஆலயத்தின் வெள்ளோட்டம் இன்று இடம்பெறுகின்ற. அதேவேளை நாளை தேர் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.