தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.