பொலன்னறுவையில் பாரிய தீ விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொலன்னறுவை, கதுறுவெல பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத் தீ விபத்தினால் இரண்டு மாடி கட்டடம் ஒன்றும், 6 கடைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவமானது பாரிய தீ விபத்தாக அப்பகுதியில் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.