இரண்டு இலட்சம் ரூபாய் பணம் திருடியவருக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் வீடொன்றினுள் புகுந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடியுள்ளதையடுத்தே பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.