மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின் தற்கொலை செய்த நபர்

Report Print Manju in சமூகம்

நபரொருவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின்னர் தானும் உடம்பில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் மாத்தறை - கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறே இந்த கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கம்புறுபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்த நபர் 42 வயதுடையவர் எனவும், மனைவி 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.