சம்பல் பாணுக்குள் சிக்கிய மர்மம்!

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தறையில் உணவுக்குள் போதைப்பொருளை ஒழித்து எடுத்துச் சென்ற முன்னாள் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேரோயின் போதைப்பொருள் பக்கட்டுகளை ரோல்ஸிற்குள் மறைத்து, சிறைச்சாலையில் இருக்கும் கைதிக்கு கொடுக்க முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை தலைமை பொலிஸ் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கே போதைப்பொருள் கொடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மாத்தறை, திஹகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான முன்னாள் கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை பார்க்க செல்வதற்கு குறித்த கடற்படை சிப்பாய் சென்றுள்ளார்.

சீனிச் சம்பல் பாண் மற்றும் ரோல்ஸ் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது 500 கிராம் போதைப்பொருள் பக்கட் ஒன்று கிடைத்துள்ளது. பின்னர் சந்தேகத்தில் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.