இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை!

Report Print Nesan Nesan in சமூகம்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கொக்கட்டிச்சோலை - பட்டிப்பளை சந்தியில் இன்றைய தினம் குறித்த கையெழுத்து வேட்டை இடம் பெற்றுள்ளது.

இக்கையெழுத்து வேட்டையானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டிப்பளை பிரிவின் அமைப்பாளரும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான பீ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதம் பேசுவதாகவும் அவரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இதற்கு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரினால் தமிழ் இனம் ஏமாற்றப்படுகின்றது. எனவே தீவிரவாத ஆளுநரை உடனடியாக நீக்க வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 400 க்கும் அதிகமான பொதுமக்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.