தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான பணிகள் மீண்டும்!

Report Print Mubarak in சமூகம்

தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (19) உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை அவரது அமைச்சில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்:

நான் 2015 ஆம் ஆண்டு முதல் அமைச்சருடன் இனைந்து மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக அண்மையில் தோப்பூர் பிரதேச செயலகம் அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம்

தயாரிக்கப்பட்டது இருந்தும் அண்மையில் ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்தால் இப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இடைநிறுத்தப்பட்ட இப்பிரதேசே செயலக பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.

தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திர பணிகளை விரைவுபடுத்தி அமைச்சரவையின் அனுமதியை பெற்றுகொள்வதற்கான நடவைக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் இருந்து தனியான குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணங்களும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக ஆராய கிண்ணியா சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள அமைச்சர் சம்மதம் தெரிவித்தார்.