சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று உத்தரவிட்டார்.

வான்எல, ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதினான்கு வயதுடைய சிறுமியை ஏழு மாத காலமாக துஷ்பிரயோகத்ற்குட்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாகியுள்ளதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாய் வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதோடு,தந்தையின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளதாகவும் தந்தை வீட்டில் இருப்பதில்யெனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி கந்தளாய் தள வைத்திய சாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.