"செமட செவன " வீட்டுத்திட்டம் - கிழக்கு வட்டாரத்தில் 50 குடும்பங்கள் தெரிவு

Report Print Mubarak in சமூகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரமதாசவினால் "செமட செவன " எனும் யாவருக்கும் வீடு வேலைத்திட்டதின் கீழ் கந்தளாய் பேராறு மேற்கு - கிழக்கு வட்டாரத்தில் 50 மாணிய அடிப்படையிலான இலவச வீடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

அமைப்பாளரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இன்றைய தினம் குறித்த அனுமதி வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான அருண சிறிசேனவின் ஏற்பாட்டில் கந்தளாய் பேராறு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் அமைப்பாளரின் தமிழ் ஊடக செயலாளருமான சல்மான் பாரிஸ், பேராறு கிழக்கு அமைப்பாளரான ஜின்னாவின் வேண்டுதளுக்கமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாளைய தினம் அமைச்சர் சஜித் பிரமதாசவின் சேருவில பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 155ஆவது "போசெவணகம" மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் போது அருண சிறிசேனவினால் வழங்கப்பட்ட சேருவில தொகுதிக்குட்பட்ட 200 வீடுகளுக்கான முதல் கட்ட காசோலை அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.

இதன்போது கந்தளாயில் 125 வீடுகளில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக 100 வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் போது கந்தளாய் பேராறு மேற்கு - கிழக்கு வட்டாரத்தில் 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன மத பேதமின்றி மக்களுக்காக செயல்படும் ஒரே தலைமை அருண சிறிசேன.

சிறந்த நற்பண்பும் ஊழலற்ற அரசியலின் ஊடாக சஜித் பிரமேதாசவின் நன்மதிப்பை வென்று மாவட்டத்தில் அதிகாரமில்லாது குறுகிய கால அரசியல் பிரவேசத்தில் சேருவில தொகுதிக்காக இதுவரையில் 1300 இலவச, மானிய அடிப்படையிலான வீடுகளை வழங்கிய அமைப்பாளருக்கு மக்கள் தமது நன்றியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.