விபத்தில் இரு மாணவிகள் படுகாயம்!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - திருமலை பகுதியில் இன்று மாலை கார் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்து அங்கு வீதியை கடப்பதற்காக நின்ற இரண்டு மாணவிகள் மீது மோதியுள்ளது.

இதன் போது விபத்திற்குள்ளாகிய ஒரு மாணவி நீண்டதூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

குறித்த மாணவிகள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு மாணவிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.