கொழும்பில் நடந்த விபரீதம் - தாயும் மகளும் பலி : பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜாஎல - துடெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய உறவுக்கார சகோதரர் ஒருவர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை 2.40 மணியளவில் ஜாஎல துடெல்ல கிரிஸ்துராஜ மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் வீதியில் புத்தளத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிய பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 வயதான சிறுமி மற்றும் 36 வயதான தாய் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.