சற்று முன்னர் கோர விபத்து - 6 பேர் பலி - மூவர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சென்ற 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியின் பின்பக்கத்தில் மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.