காதலியை கைப்பிடிக்கும் மகிந்தவின் இளைய மகன்

Report Print Steephen Steephen in சமூகம்

ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோ மலையில் வைத்து, தனது காதலி டட்யானா ஜயரத்னவிடம் தனது திருமண யோசனையை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தானும், தனது காதலியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித்த ராஜபக்சவுக்கும் அவரது காதலி டட்யானா ஜயரத்னவுக்கும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வெளியாகிய இந்த செய்தியில் உண்மையில்லை என ரோஹித்த ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் தற்போது தனக்கு திருமணம் நடக்கவிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.