மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை முன்றலில் திரண்ட பெருந்திரளான மக்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

அகில இலங்கை மக்கள் செயல் கழகம் ஏற்பாடு செய்திருந்த பட்டத்திருவிழா நேற்றைய தினம் மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை முன்றலில் இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பட்டத்திருவிழா அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் செயலாளர் லோகநாதன் நிரோஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது உழவர் திருநாள் வழிபாடு, முட்டி உடைத்தல், சிறுவர்களுக்கான சிறப்பு விளையாட்டுக்கள் அத்துடன் பட்டம் போட்டி என்பன இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதனை முன்னிட்டு பெருந்திரளானோர் கடற்கரையில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.