தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது?

Report Print Kamel Kamel in சமூகம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்யக்கூடும் என பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரக்னா லங்கா நிறுவனம் மற்றும் அவன்கார்ட் நிறுவனம் ஆகியனவற்றுக்கு இடையில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோரை கைது செய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த இருவருக்கும் மேலதிகமாக ஓய்வு பெற்றுக் கொண்ட இரண்டு இராணுவ மேஜர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார்.

குறித்த காலப்பகுதியில் சமன் திஸாநாயக்க எடுத்த சில தீர்மானங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.