பாடசாலை செல்லும் மாணவர்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த நபருக்கு நேர்ந்த நிலை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, சம்பூரில் சாராயம் குடித்து விட்டு வீதியால் செல்லும் பாடசாலை பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நீணாக்கேணி, தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு வீதியில் நின்று கொண்டு, பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் வீதியால் செல்வோரிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளதாக சம்பூர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் முதியவரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அவரது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே சந்தேகபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Offers