கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஒலிபென்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழா விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலைக்கு புதிய கட்டடம் ஒன்று தேவை என இராஜாங்க கல்வி அமைச்சராக செயல்பட்ட போது அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரம் 1 முதல் தரம் 5 வரை இயங்கும் இப்பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

குறித்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட வலய கல்வி பணிப்பளார், அதிபர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.