இலங்கையை உலுக்கிய கோர விபத்து - காருக்குள் சிக்கிய வெளிநாட்டு துப்பாக்கியால் சர்ச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு - சிலாபம் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வென்னப்புவ, நைனமடம பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

8 மில்லி மீற்றர் தோட்டாக்கள் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கியில் 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்டு, குறித்த மோட்டார் வாகனத்திக் கதவினுள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கி என்ன காரணத்திற்காக கொண்டு செல்லப்பட்டதென இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் காலி மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 36 வயதுடைய 6 பேர் என குறிப்பிடப்படுகின்றது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.