ஆபிரஹாம் சிங்ஹோ புதிய கிராமம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு!

Report Print Thirumal Thirumal in சமூகம்
135Shares

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மேலும், இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 20 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், குடிநீர் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.