தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொங்கல் விழா!

Report Print Kumar in சமூகம்
140Shares

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தைத்திருநாளை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா, குருந்தையடி முன்மாரி உரப்பனை விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய முன்றிலில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது உரப்பனை விநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு திரு சிவஸ்ரீ ச.கு லம்போதர சர்மா விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து பொங்கல் பாணைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலய முன்றிலில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா உட்பட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பொங்கல் பானை வைக்கப்பட்டு கிராமிய வாசனையுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.