மானிய அடிப்படையிலான இலவச வீடுகளுக்கான அனுமதி வழங்கி வைப்பு!

Report Print Mubarak in சமூகம்

அமைச்சர் சஜித் பிரமதாசவினால் "செமட செவன" எனும் யாவருக்கும் வீடு வேலைத்திட்டதின் கந்தளாய் பேராறு மேற்கு, கிழக்கு வட்டாரத்தில் 50 மானிய அடிப்படையிலான இலவச வீடுகளுக்கான அனுமதி இன்று வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் சஜித் பிரமதாச சேருவில பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 155 ஆவது "போசெவணகம" மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது Dr. அருண சிறிசேனவினால் வழங்கப்பட்ட, சேருவில தொகுதிக்குட்பட்ட 200 வீடுகளுக்கான முதல் கட்ட காசோலை அமைச்சினால் வழங்கப்பட்டது.

இதன்போது கந்தளாயில் 125 வீடுகளில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக 100 வீடுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.