கிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு சுவரொட்டிகள் இன்று இரவு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் ஒட்டப்பட்டுள்ளன.

முல்லைத்தீவுக்கு நாளை விஜயம் செய்யும் ஜனாதிபதி தலைமையில், போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் பாவனையை மக்கள் மத்தியில் இருந்து இல்லாது ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சுவரொட்டிகள் இன்று இரவு கிளிநொச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் படையினரால் ஒட்டப்பட்டு வருகின்றன.

Latest Offers