மைத்திரியின் வருகையின் போது போராட்டத்திற்கு தயாராகும் முல்லைத்தீவு மக்கள்!

Report Print Murali Murali in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள், படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி 697வது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.

இந்நிலையில், நாளை முல்லைத்தீவிற்கு செல்லும் ஜனாதிபதி, வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளையும் விடுவிக்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார்கள்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இதுவரை எந்த முடிவினையும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் விரைவில் தங்களுக்கு ஒரு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 684 நாட்களைக் கடந்த நிலையில் போராட்டத்தினை நடத்திவருகின்றார்கள்.

நாளை வருகைதரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.