முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சியில் அதிரடியாக கைது!

Report Print Murali Murali in சமூகம்

கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை குறித்த நபரின் வீட்டினை சோதனையிட்டபட்டுள்ளது.

இதன்போது இரண்டு கைத்துப்பாக்கி, ஒரு கட்டத்துவக்கு மற்றும் 150 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தில் வீட்டில் பெற்றோருடன் வசித்து வைத்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.