கொழும்பில் வீடு இல்லாதவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் வருமானம் குறைந்த நிலையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைத்தது முதல் 2015ஆம் ஆண்டு வரையில் கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189ஆவது தோட்டத்தில் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டினார்கள்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.