இலங்கையில் சற்று முன் பதிவாகியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் மாத்தறை - வெலிகம, பொல்வத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.