திருகோணமலை பகுதியில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்து விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற போதே சீனக்குடா கொட்பேக்கு அருகாமையில் குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது டிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமெனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.