மட்டக்களப்பு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடல் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கனகசுந்தரம் தலைமையில், மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கூட்டுறவு சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பில் அதிகாரிகளினால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டோர் சார்பில் இருவரும், பெண்கள் சார்பில் இருவரும் உட்பட மேலதிகமாக ஐவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்றுகூடலில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.