உயிர்ப்பிக்கப்பட வேண்டிய யாழ்ப்பாண ஆறுமுகம் திட்டம்...

Report Print Dias Dias in சமூகம்

மழை நீரை நம்பி விவசாய செய்கை மேற்கொள்வது யாழ்ப்பாணம் குடாநாட்டில் அதிகமாக உள்ளது.

யாழ்ப்பாணம் குடாநாட்டில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிமாக உள்ள கிணறுகளில் சவரத்தன்மைக் கொண்ட நீரே காணப்படுகின்றன. இந்நிலையில் மக்களின் பாவணைக்கு பயன்படுத்துகின்ற சவரத்தன்மை கொண்ட நீரை நன்னீராக மாற்றுவதற்காகவே யாழ்ப்பாண ஆற்றுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி மக்கள் சுத்தமான நீரை பருக முடியும்.

இத்திட்டமானது கடந்த நூற்றாண்டு முன்னெட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் நிறைவு பெறாத ஒரு திட்டமாகவே காணப்படுகின்றது.

இரணைமடுக்குளத்தின் மேலதிக நீருடன் கனகராயன் ஆற்று நீர், ஆணையிறவு நீரேரி வடமராட்சி/ வடமராட்சிக் கிழக்கு நீரேரி, தொண்டைமானாறு மற்றும் உப்பாறு ஆகியன நீரேரிகள் இணையும் போதே யாழ்ப்பாணத்துக்கான ஆறு உருவாக்கப்படுகின்றது.

இந்த யாழ்ப்பாண ஆறுத்திட்டமானது கடந்த 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஒல்லாந்து காலத்திலேயே பேசப்பட்டது. 1897ஆம் ஆண்டு யாழ். அரச அதிபர் யாழ்ப்பாணம் ஆற்றினை அமைக்க முதற்கட்ட நடவடிக்கையாக இதற்கான தடுப்பணைகளை புனரமைக்க அதாவது ஆணையிறவு நீரேரியை நன்னீராக்கும் முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

1916ஆம் ஆண்டில் இருந்த யாழ். அரச அதிபர் யாழ்ப்பாணம் ஆறுமுகம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பரிசோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். எனினும், 1947இல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து 1950இல் இதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான செயற்றிட்டம் 1983ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக அவர் ஒரு கூட்டத்தினையும் ஏற்பாடு செய்திருந்தார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் அக்கூட்டம் நிகழாமல் யாழ்ப்பாணம் ஆறுத்திட்டம் கைவிடப்பட்டது.

இத்திட்டம் இதற்கு சுமார் 20 வருடங்கள் கழித்து அன்றைய நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் யாழ்ப்பாணம் ஆறுமுகம் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அக்காலத்தில் விடுதலை புலிகளும் கூட இத்திட்டத்திற்கு தமது சம்மதத்தினை தெரிவித்துள்ளனர்.

2003இல் ஒரு ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததால் இந்த திட்டத்தின் ஆரம்ப பணிகளோடு மீண்டும் அது நின்றது. இந்நிலையில் 2007இல் இலங்கை எந்திரவியலாளர் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாண ஆற்றுதிட்டத்தை உடனடியாக முழுமைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு சுமார் 100 மில்லியன் ரூபாயினை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது. எனவே இந்த புனரமைப்புத் திட்டமானது 2008,2009 இல் நிறைவு பெற்றிருந்த நிலையில் பல காரணங்களினால் முற்றாக நிறைவு பெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் ஆறு திட்டத்திற்காக 1954இல் இலங்கையில் இருந்த நீர்ப்பாசன பொறியியலாளர் ஆறுமுகம் கடுமையாக உழைத்தார்.

இவரது மகனும் அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்துக்கான நீரியல் கொள்கை மாநாட்டில் கலந்துக் கொண்டு இத்திட்டத்தின் நன்மைகள் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.

இத்திட்டமானது மீண்டும் உயிர்பிக்கப்பட்டு அமைக்கப்படுவதும் யாழ். மக்கள் நன்னீரை பெற்றுக்கொள்ளும் கனவு நிஜமாகுவதும் ஒன்றாகும்.

Latest Offers