வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Rusath in சமூகம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4680 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமடினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மிச்நகர், ஹிஸ்புல்லாஹ் நகர், மீராகேணி, தாமரைக்கேணி மற்றும் சத்தாம் ஹுஸைன், ஸம்ஸம் கிராமம், ஸக்காத் கிராமம், ஐயங்கேணி, உள்ளிட்ட கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு நிவாரண விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை அண்டியுள்ள அரபிக் கல்லூரி வளாகத்தில் தலா 1250 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா பருப்பு உள்ளிட்ட உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் போது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளையும் வழங்க அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிரமத்துடன் காலங்கழிக்கும் நிலைமையை அறிந்து கொண்டதின் பேரில் அவர்களின் நன்மை கருதி தனது சொந்த நிதி அறக்கட்டளை மூலம் நிவாரணம் வழங்க முடிவெடுத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.