அடியோடு கைவிட வேண்டிய நிலையில் உள்ள சோளப் பயிர்ச்செய்கை

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, படுவாங்கரைப் பகுதியில் சோளம் பயர்ச்செய்கையில் இவ்வருடம் என்றுமில்லாத அளவிற்கு படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் தமது வாழ்வாதாரத்தை அடியோடு இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத்தாக்கத்தால் தாம் இப்பயிருக்கு முதலீடு செய்த பணத்திலிருந்து வருமானம் பெறமுடியாதுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.