தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி

Report Print Ashik in சமூகம்

மன்னார், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இன்று 133ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்? மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் குறித்த புதைப் குழி இயற்கையான மயானமா? அல்லது கொடூரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினும் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மனித எச்சங்கள் அமெரிக்காவிற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மன்னார் மனிதப் புதைகுழி ஆய்வு மற்றும் அகழ்வுப் பணிகள் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நாளை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers