காணாமல் போன குடும்பஸ்தர் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

Report Print Rusath in சமூகம்

காணாமல் போன குடும்பஸ்தரான ஆணொருவர் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிழூர் - கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ந.கோபால் (வயது 42) என்பவருடைய சடலமே மகிழூர் பெரியகுளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வராததினால் உறவினர்கள் குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் முதலைக் கடிக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers