வட்டக்கச்சியில் உதயமாகிய பிரம்மாலயா கலைக்கல்லூரி!

Report Print Dias Dias in சமூகம்

வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் சரஸ்வதி ஆலயத்தில் பிரம்மாலயா கலைக்கல்லூரி ஆரம்பித்துவைக்கப்பட்டது

தைப்பூச தினமாகிய இன்று ஆராதனைகளுடன் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முதல்வர் பூலோகராஜா முன்னிலையில் பிரம்மாலயா கலைக்கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி - இராமநாதபுரம் மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கிய இளையவர்களின் ஆளுமை, கலைத்திறன், விருத்தி மற்றும் சமூக ஒழுக்கம் என்பவற்றை நோக்காக கொண்டு இந்க கல்லுரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வில் கலையாசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.