கிழக்கு மாகாண ஆளுநர் கல்முனைக்கு விஜயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லாஹ் கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது கல்முனை பிரதேசத்திலுள்ள அனைத்து இன மக்களுக்குமேற்ற வகையில் பிரதேசத்தின் அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பாகவும், கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரை மற்றும் சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன மத பாகுபாடின்றி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.