முல்லைத்தீவு - மல்லாவி, யோகபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிநுட்ப கலை, கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழிற் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, துணுக்காய், கரைதுறைப்பற்று, வவுனியா வடக்கு பிரதேச செயலாளரகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.