கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட இளைஞர்கள்! மேலும் சிலருக்கு எதிராக வழக்கு

Report Print Kamel Kamel in சமூகம்

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை உத்தியோகத்தர்கள் சிலருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட உள்ளது.

கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டு, பின் காணாமல் போக செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை உத்தியோகத்தர்களுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழக்குத் தொடரப்பட உள்ளது.

குறித்த கடற்படை உத்தியோகத்தர்களுக்கு எதிராக நேரடியாகவே மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட மா அதிபர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடத்தாது சந்தேகநபர்களுக்கு எதிராக நேரடியாக மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களில் சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.