திருகோணமலையில் இரு பிள்ளைகளின் தாயாரை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவன்

Report Print Mubarak in சமூகம்
351Shares

திருகோணமலை - கந்தளாய் பகுதியில், வெலிங்டன் வீதியில் கணவனின் கத்தி குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

குடும்ப பிரச்சினைகள் காரணமாக இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இன்று காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் போது, அவரது கணவரான 35 வயதுடைய சுபியான் இன்ஸான் கத்தியால் தாக்கியுள்ளார்.

மனைவியின் கழுத்திலும், வயிற்றிலும் கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது. கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.