யாழில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கும்பல்! சிறுமிக்கு செய்த கொடூரம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். வலி வடக்கில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமியொருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலி வடக்கு பகுதியில் மூவரடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று இரு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளது. அதன்போது ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது பெரியம்மாவும், மற்றுமொரு உறவினரான பெண்ணுமாக மூன்று பேர் இருந்துள்ளனர்.

அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு, வீட்டில் இருந்த 27000 ரூபாய் பணத்திணை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.