யாழ். பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழா

Report Print Sumi in சமூகம்
115Shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விழாவின் முதலாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுள்ளது.

இதன்போது பட்டதாரிகளுக்கு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணாம் விக்னேஸ்வரன் ஆகியோர் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளனர்.

இதன்போது கலைப் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம், விவசாய பீடம், பொறியியல் பீடம், உயர் பட்டப் படிப்புகள் பீடம், சித்த மருத்துவ பிரிவை சேர்ந்த 459 பட்டதாரிகள் மற்றும் 156 டிப்ளோமாதாரிகள் என மொத்தம் 615 பட்டதாரிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.