யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 19 ஏக்கர் காணி இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி பகுதியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 19 ஏக்கர் காணியே இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.
அதாவது ஜே.249, ஜே.250 கிராம சேவகர் பிரிவுக்குரிய காணிகளே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளை மக்கள் மற்றும் பிரதேச சபையினர், அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த காணி கடந்த 1990ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.