மட்டக்களப்பில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Navoj in சமூகம்
72Shares

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வாகரை, அழகாபுரியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபை பெண் உறுப்பினரொருவரின் கணவர் எனவும் தெரியவந்துள்ளது.

தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணியளவில் அவர் சென்றுள்ளபோதும் அவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை இச்சம்பவம் குறித்து உறவினர்களால் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போத திங்கட்கிழமை காலை தட்டுமுனை ஆற்றில் இருந்து மீனவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூராய்விற்காக வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வாகரை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.