ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் ஹட்டனில் கைது

Report Print Dias Dias in சமூகம்
0Shares

ஜேர்மன் நாட்டுப் பெண்கள் இருவரை ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்துக் குறித்த காரை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன் போதே இரு பெண்களிடமிருந்தும் 1105 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா பகுதிக்குச் சுற்றுலா சென்ற இரண்டு பெண்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இரண்டு பெண்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.