இலங்கையில் இராணுவ முகாம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இராணுவம் முகாம் ஒன்றை அமெரிக்கா நிறுவ உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.
அமெரிக்க முகாம் பற்றி அண்மையில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவம், மீட்புப் பணிகள், கரையோரப் பாதுகாப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இராணுவ முகாம் என்ற விடயம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அமெரிக்கா உத்தேசிக்கவில்லை என திட்டவட்டமாக கூறுவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.