கனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

கனடா, மொன்றியல் மாநகரில் முதன் முறையாக எமது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மரபு திங்கள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு இம்மாதம் கடந்த 5ஆம் திகதி கியுபெக் தமிழர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதில் 40இற்கும் மேற்பட்ட அமைப்புகள், 9 சமூக வலைத்தளங்கள் மற்றும் 400 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆதரவுடன் பிறமொழி பேசும் அமைப்புகளின் பிரதிநிதிகளோடும் நடைபெற்றுள்ளது.

இது கனடா புலம்பெயர் தமிழர்களின் வரலாறு காணாத ஒரு வெற்றியாகும்.

இந்த நிகழ்ச்சியானது மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடனும், மத்திய மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் மாநகர ஆட்சியாளர்களதும் முன்னிலையிலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அருட்தந்தை றோகான், ஒன்றாரியோ முன்னாள் மாநகர உறுப்பினர் மற்றும் இந்த தமிழ் மரபு திங்கள் உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக விளங்கியவரான நீதன்ஷான் ஆகியோரினால் சிறப்பு பேச்சும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது எமது கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்வாக அனைவராலும் கருதப்பட்டது.