வவுனியாவில் வீதிக்கு மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை, விளக்குவைத்தகுளம் கிராம வீதிக்கு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விளக்குவைத்தகுளம் பகுதியில் கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கிராமத்திற்கு மின்விளக்குகள் பொருத்தி தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமைவாகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விளக்கு வைத்தகுளம் கிராம அபிவிருத்தி சங்க பொது மண்டபத்தில் கடந்தமுறை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வாக்குறுதிக்க அமைவாகவே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் நிதியில் அப்பகுதியில் பொருத்தும் நடவடிக்கையினை தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Latest Offers