முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Report Print Yathu in சமூகம்
86Shares

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதில் சிக்குண்டு 4 வயதுடைய சிறுவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற மின்சாரத்தில் சிக்குண்டு ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.