மகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்!

Report Print Dias Dias in சமூகம்

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தெற்கு, மத்திய ஆசிய பகுதிகளுக்கான முகநூலின் பொது கொள்கைக்கான பணிப்பாளர் அங்கி தாஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, விஜேராமவில் உள்ள எதிர்கட்சி தலைவரின் வாசஸ்தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமூக வலைதளங்களில் அனுமதிக்கப்படக்கூடிய சந்தை வாய்ப்பு மற்றும் அதிகரிக்கும் போலி தகவல்களுக்கு எதிரான சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள கலந்துரையாடப்பட்டன.

முகநூலின் பங்களிப்புடன் இடம்பெற்ற காலி கல்வியியல் திருவிழாவின் 10ஆம் ஆண்டு கொண்டாடங்களை ஒட்டி அங்கி தாஸ் மற்றும் அவரது குழுவினரின் பயணம் இடம்பெற்றிருந்தது.

இத்திருவிழாவின் ஒரு அங்கமாக உலகம் முழுவதும் இருந்தும் நாடாளாவிய ரீதியில் இருந்தும் பங்குபெறும் வகையில் ஓவிய பிரச்சார போட்டி இடம் பெற்றது.

அதில் வரையப்பட்ட ஓவியம் ஒன்றை எதிர்கட்சி தலைவருக்கு அங்கி தாஸ் பரிசளித்திருந்தார்.

கலந்துரையாடப்பட்ட விடையங்களுக்கான தீர்வு பற்றிய யோசனைகள் பரிமாரப்பட்டதுடன் சந்திப்பும் நிறைவடைந்தது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, செஹான் சேமசிங்க, எதிர்க்கட்சி அலுவலகத்தின் தகவல் தொடர்பாடல் அதிகாரிகளான கீதநாத் காசிலிங்கம், சமித்திரி ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.