மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததுவிட்டு தலைமறைவாக இருந்த கணவன் அலறி விதை சாப்பிட்ட நிலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் குற்ற விசாரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6.00மணியளவில் வீட்டிலிருந்து ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குசெல்லும் போது கணவனான 35 வயதுடைய சுபியான் இன்ஸான் என்பவர் தனது மனைவிக்கு சராமரியாக கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடும்ப பிரச்சினைகள் காரணமாக இக்கத்தி குத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, கொலை செய்த கணவன் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ய சென்ற போது அலறி விதை சாப்பிட்ட நிலையில் கைது செய்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
35 வயதுடைய சந்தேக நபயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு,சந்தேக நபரை நாளைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.